CricketArchive

டக்வொர்த் லீவிஸ் விதி: பஞ்சாப் வெற்றி
by CricketArchive


Scorecard:Delhi Daredevils v Kings XI Punjab
Player:DPMD Jayawardene

DateLine: 17th May 2008

 

போட்டி:20 ஓவர்கள் போட்டி (இரவுப் போட்டி), 39-வது தகுதிச்சுற்று ஆட்டம்
இடம்:பெரோஷ் ஷா கோட்லா மைதானம். டெல்லி.
தேதி:17.05.2008. சனிக் கிழமை.
மோதிய அணிகள்:டெல்லி அணி - பஞசாப் அணி
முடிவு:6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
ஆட்ட நாயகன்:மஹேல ஜெயவர்த்தனே

 

வணக்கம்

20 ஓவர்கள் கொண்ட இந்திய முதன்மை கூட்டுக் கிரிக்கெட் போட்டித் தொடரின் 39-வது தகுதிச்சுற்று ஆட்டம் இன்று இரவு தில்லியிலுள்ள பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டக்-வொர்த் லீவிஸ் விதிப்படி 6 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

மோசமான வானிலை காரணமாக ஆட்டம் பாதியில் தடைபட்டதால், இரு அணிகளுக்கும் தலா 11 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டது.

பூவா தலையா வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி ஆடிய டெல்லி அணி 11 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் குவித்தது.

தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக், கௌதம் காம்பீர் இருவருமே அபாரமாக விளையாடினர். சேவாக் 26 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 5 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் விளாசினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த காம்பீர் 28 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பொவார் பந்துவீச்சில் ஸ்டம்புகளை பறிகொடுத்து ஆட்டமிழந்தார்.

கடைசி ஓவரை வீசிய ஜேம்ஸ் ஹோப்ஸ் 2 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதையடுத்து 11 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டம் மீண்டும் மழையால் தடைபட்டது.

இதையடுத்து டக்-வொர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.

பஞ்சாப் அணி விளையாடிய போது அந்த அணியின் கேப்டன் யுவராஜ் சிங் 8 பந்துகளில் 3 இமாலய சிக்சர்களுடன் 23 ரன்கள் எடுத்து வெற்றிக்கு அடித்தளமிட்டார். மஹேல ஜெயவர்த்தனே 17 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 2 சிக்சர்கள், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் விளாசினார். போமர்ஸ்பாச் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்களுடன் 25 ரன்கள் குவித்தார்.

ஆட்ட நாயகனாக பஞ்சாப் அணியின் மஹேல ஜெயவர்த்தனே தேர்ந்தெடுக்கப்பட்டார்.


LATEST SCORES

| Privacy Policy | FAQs | Contact |
Copyright © 2003-2024 CricketArchive