Player: | KMDN Kulasekara |
DateLine: 22nd August 2008
முழுப்பெயர்: குலசேகர முடியன்சேலகே தினேஷ் நுவன்
 
பிறப்பு: 22 ஜூலை 1982. நித்தம்புவ, இலங்கை. 
மட்டை வீச்சு முறை: வலதுகை ஆட்டக்காரர் 
அணியில் வீரரின் நிலை: பந்து வீச்சாளர் 
பந்து வீச்சு முறை: வலதுகை மித வேகப்பந்து வீச்சாளர் 
விளையாடிய அணிகள்: இலங்கை, பண்டாரநாயகே கல்லூரி கம்பா அணி, வடக்கு பஸ்னஹிரா அணி, கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப், காலே கிரிக்கெட் கிளப்.அறிமுகம்:
 
டெஸ்ட் போட்டி: ஏப்ரல் 4-8, 2005 அன்று இலங்கை - நியுசிலாந்து இடையே நேப்பியரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிஒருதினப் போட்டி: நவம்பர் 18, 2003 அன்று இலங்கை - இங்கிலாந்து இடையே தம்புல்லாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டி
20 ஓவர் போட்டி: ஆகஸ்டு 17, 2004 அன்று கோல்ட்ஸ் கிரிக்கெட் கிளப் - இலங்கை விமானப்படை ஸ்போர்ட்ஸ் கிளப் இடையே கொழும்புவில் நடைபெற்ற 20 ஓவர் போட்டி
 
இலங்கை அணிக்கு கிடைத்திருக்கும் புதிய மித வேகப்பந்து வீச்சாளர். இலங்கையிலுள்ள நித்தம்புவ என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர். 
இளம் வயதில் சாப்ட் பால் விளையாட்டில் சிறந்து விளங்கிய இவர், பின்னாளில் கிரிக்கெட்டில் ஈடுபாடு காட்டினார். அதன் விளைவாக நெகெகோடா கிரிக்கெட் கிளப்பிலும், அதன் பின்னர் காலே கிரிக்கெட் கிளப்பிலும் சேர்ந்து விளையாட ஆரம்பித்தார். 2002-03ல் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி, சிறந்த பந்துவீச்சாளர் என்ற விருதினைப் பெற்றார். இதையடுத்து இலங்கை ஏ அணியில் இடம்பிடித்தார். 
முதல் தரப்போட்டிகளிலும், இலங்கை ஏ அணியிலும் சிறப்பாக விளையாடியதன் காரணமாக 2003-ல் இங்கிலாந்திற்கெதிரான ஒருதினத் தொடரில் இடம்பிடித்தார். நவம்பர் 18, 2003 அன்று இலங்கை - இங்கிலாந்து இடையே தம்புல்லாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் முதன்முதலாக சர்வதேச ஒருதினப் போட்டிகளில் அறிமுகமானார். அறிமுகமான முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மட்டுமின்றி 1 விக்கெட்டினை தனது திறமையான பீல்டிங்கால் வெளியேற்றினார். இப்போட்டியில் இங்கிலாந்து அணி வெறும் 88 ரன்களில் ஆட்டமிழந்தது. இதில் இலங்கை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இவரது அற்புதமான பந்துவீச்சாலும், ரிவர்ஸ்விங் பந்து வீச்சாலும் சில நேரங்களில் துவக்க பந்துவீச்சாளராக செயல்பட்டார். மேலும் நேர்த்தியான முறையிலும், சரியான அளவிலும், எதிராளிக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் பந்து வீசுவதிலும் வல்லவராகத் திகழ்ந்தார். 
ஏப்ரல் 4-8, 2005 அன்று இலங்கை - நியுசிலாந்து இடையே நேப்பியரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவரது டெஸ்ட் அறிமுகம் அரங்கேறியது. இவர் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 
2006-ல், லார்ட்ஸில் இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரை சதத்தை டெஸ்ட் அரங்கில் பதிவு செய்தார். இப்போட்டியின் சிறப்பம்சம் என்னவென்றால், முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 551 ரன்கள் எடுத்து தனது முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. 
இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 192 ரன்களில் ஆட்டமிழந்து பாலோ ஆன் ஆனது. இதில் முன்வரிசை வீரர்களில் 4 பேர் 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னால் வந்த டெயிலெண்டர்கள் 82 ரன்கள் குவித்தனர். இதில் இவர் 29 ரன்கள் எடுத்தார். 
இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணிக்கு மீண்டும் டெயிலெண்டர்கள் கைகொடுத்தனர். இதில் இவர் 64 ரன்கள் குவித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இவரது அணி 537 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தது. தோல்வியின் விளிம்பிலிருந்த இப்போட்டி டிரா ஆவதற்கு இவரும் ஒரு காரணமாயிருந்தார். 
இடையில் இவர் பார்ம் இழந்த காரணத்தால் அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். இதன்பிறகு இவரது அயராத உழைப்பாலும், கடுமையான பயிற்சியாலும் மீண்டும் 2007 உலகக்கோப்பைக்கான இலங்கை ஒருதின அணியில் இடம்பிடித்தார். 
2007-08 ல் மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருதினப் போட்டிகளில் விளையாடினார். இத்தொடரில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஆசியக்கோப்பை தொடரில் இடம்பிடித்து விளையாடினார். இத்தொடரில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். . இதையடுத்து இந்திய அணியுடன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற 5 போட்டிகள் கொண்ட ஒருதினத் தொடரிலும், செப்டம்பரில் நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி போட்டி தொடரிலும் இடம் பிடித்துள்ளார். 
வெளியான தேதி: 22 ஆகஸ்டு 2008.LATEST SCORES
CURRENT EVENTS
- Afghanistan and New Zealand in India 2024/25
- Australia in Great Britain 2024
- Bangladesh in India 2024/25
- England Women in Ireland 2024
- ICC Men's Cricket World Cup League Two 2023/24 to 2027
- ICC Men's T20 World Cup Asia Qualifier A 2024/25
- ICC World Test Championship 2023 to 2025
- Ireland and South Africa in United Arab Emirates 2024
- Namibia Women's International T20 Series 2024/25
- New Zealand in Sri Lanka 2024/25
- New Zealand Women in Australia 2024/25
- Rwanda Women in Kenya 2024/25
- South Africa Women in Pakistan 2024/25
- Sri Lanka in England 2024
View all Current Events CLICK HERE